உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / 87 வயதில் தங்கம் வென்ற தமிழக ஹீரோ: ஆசிய மாஸ்டர்ஸ் தடகளத்தில்

87 வயதில் தங்கம் வென்ற தமிழக ஹீரோ: ஆசிய மாஸ்டர்ஸ் தடகளத்தில்

சென்னை: ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் 87 வயதில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் தமிழகத்தின் கிரி ராஜேந்திரன்.சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. 20க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த, 35-100 வயது வரையிலான 3,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.ஆண்களுக்கான 'ஸ்டீபிள் சேஸ்' ஓட்டத்தில் 87 வயதான சிவகாசியைச் சேர்ந்த கிரி ராஜேந்திரன் பங்கேற்றார். இடைவிடாது 5 முறை மைதானத்தை சுற்றி வந்து இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றார். இவர் இதுவரை 17 ஆசிய பதக்கங்கள் உட்பட 20 பதக்கங்களை தன்வசம் வைத்துள்ளார். மூன்றாம் நாள் முடிவில் ஆண்கள் பிரிவில் 36 தங்கம், பெண்கள் பிரிவில் 26 தங்கம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் முதல் இடத்தில் தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை