உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / எட்டாவது அதிசயம் ஜெர்மனி: ஜூனியர் ஹாக்கியில் உலக கோப்பை வென்றது

எட்டாவது அதிசயம் ஜெர்மனி: ஜூனியர் ஹாக்கியில் உலக கோப்பை வென்றது

சென்னை: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில் ஜெர்மனியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த பைனலில் 3-2 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஸ்பெயினை வீழ்த்தி, 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.சென்னை, மதுரையில், ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் நடந்தது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த பைனலில் ஜெர்மனி, ஸ்பெயின் அணிகள் மோதின. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஜஸ்டஸ் வார்வெக் ஒரு 'பீல்டு' கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் ஜெர்மனி அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஸ்பெயின் அணிக்கு 33வது நிமிடத்தில் நிக்கோலஸ் முஸ்டாரோஸ் ஒரு 'பீல்டு' கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது.எட்டாவது முறை: இதனையடுத்து போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதில் அசத்திய ஜெர்மனி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது. தவிர ஜெர்மனி அணி, 8வது முறையாக (1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023, 2025) உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெர்மனி, 2 முறை (1979, 2021) வெள்ளி, 3 முறை (1997, 2001, 2016) வெண்கலம் வென்றிருந்தது.ஸ்பெயின் 'வெள்ளி': பைனல் வரை சென்ற ஸ்பெயின் அணி, முதன்முறையாக 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றது. இதற்கு முன், 2 முறை (2005, 2023) வெண்கலம் வென்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை