உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / இந்தியாவுக்கு மூன்று தங்கம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

இந்தியாவுக்கு மூன்று தங்கம்: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்தது.பெருவில், உலக ஜூனியர் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அஜய் மாலிக் (628.8 புள்ளி), பார்த் ராகேஷ் மானே (627.7), அபினவ் ஷா (627.0) முறையே 2, 4, 6வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர்.பைனலில் அசத்திய பார்த் ராகேஷ் மானே, 250.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். மற்ற இந்திய வீரர்களான அஜய் மாலிக் (186.7 புள்ளி), அபினவ் ஷா (144.2) முறையே 4, 7வது இடம் பிடித்தனர்.ஆண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவில் அஜய் மாலிக் (628.8 புள்ளி), பார்த் ராகேஷ் மானே (627.7), அபினவ் ஷா (627.0) அடங்கிய இந்திய அணி 1883.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.பெண்கள் அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவுவில் கவுதமி (634.7 புள்ளி), ஷாம்பவி (632.6), ஓஜாஸ்வி தாகூர் (631.4) அடங்கிய இந்திய அணி 1894.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது.பெண்களுக்கான தனிநபர் 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு பைனலில் இந்தியாவின் கவுதமி (209.3) 4வது இடம் பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். மற்ற இந்திய வீராங்கனைகளான ஷாம்பவி (188.4), ஓஜாஸ்வி (146.1) முறையே 5, 7வது இடம் பிடித்தனர்.இதுவரை 5 தங்கம், 3 வெண்கலம் என 8 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !