உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உகாண்டா வீரர் உலக சாதனை: பாதி மாரத்தான் ஓட்டத்தில்

உகாண்டா வீரர் உலக சாதனை: பாதி மாரத்தான் ஓட்டத்தில்

பார்சிலோனா: பாதி மாரத்தான் ஓட்டத்தில் உகாண்டாவின் ஜேக்கப் கிப்லிமோ உலக சாதனை படைத்தார்.ஸ்பெயினின் பார்சிலோனா நகரில், பாதி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் உகாண்டா வீரர் ஜேக்கப் கிப்லிமோ பங்கேற்றார். இலக்கை 56 நிமிடம், 41 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த இவர், புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு ஸ்பெயினின் வாலன்சியா நகரில் நடந்த போட்டியில் எத்தியோப்பியாவின் யோமிப் கெஜெல்சா, பந்தய துாரத்தை 57 நிமிடம், 30 வினாடியில் கடந்த சாதனை படைத்திருந்தார்.உகாண்டாவை சேர்ந்த கிப்லிமோ, டோக்கியோ ஒலிம்பிக் (2021), உலக சாம்பியன்ஷிப் (2022) 10,000 மீ., ஓட்டத்தில் கிப்லிமோ வெண்கலம் வென்றிருந்தார். தவிர இவர், பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டில் (2022) 5000, 10000 மீ., ஓட்டத்தில் தலா ஒரு தங்கம் கைப்பற்றினார். உலக பாதி மாரத்தான் ஓட்டத்திலும் (2020) ஒரு தங்கம் (தனிநபர்), ஒரு வெண்கலம் (அணி) வென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 02:50

பத்திரிகை நிருபர்களை கண்டால் இதை விட வேகமாக ஒருவர் ஓடுவார்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 02:49

அதாவது கிட்டத்தட்ட மணிக்கு 25 கிமீ வேகத்தில் அந்த 21.1 கிமீட்டரையும் ஓடி கடந்து உள்ளார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை