உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி

உலக கோப்பை செஸ்: பைனலில் ஹம்பி

பதுமி: உலக கோப்பை செஸ் தொடரின் பைனலுக்கு இந்திய வீராங்கனை ஹம்பி முன்னேறினார். பரபரப்பான அரையிறுதியில் சீனாவின் டிங்ஜீயை வீழ்த்தினார்.ஜார்ஜியாவில், பெண்களுக்கான உலக கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் அசத்திய இந்தியாவின் திவ்யா, சீனாவின் ஜோங்கியை வீழ்த்தி, முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர். இரண்டு போட்டிகளின் முடிவில் ஸ்கோர் 1.0 - 1.0 என சமநிலையில் இருந்தது.'டை பிரேக்கர்' முதல் போட்டியில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 65வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இரண்டாவது போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஹம்பி, 39வது நகர்த்தலில் வெற்றி பெற, 2.0 - 2.0 என மீண்டும் சமநிலை வகித்தது.அடுத்த 4 போட்டியில், 3ல் அசத்திய ஹம்பி, முடிவில் 5.0 - 3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். நாளை துவங்கவுள்ள பைனலில் இந்தியாவின் ஹம்பி, திவ்யா மோதுகின்றனர். உலக கோப்பை பைனலுக்கு முதன்முறையாக இரண்டு இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்று வரலாறு படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை