உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

அரையிறுதியில் சுவீடன் மாடோசின்ஹோஸ்: போர்ச்சுகலில் நடக்கும் பெண்கள் (20 வயது) 'யூரோ' கூடைப்பந்து காலிறுதியில் சுவீடன் அணி 77-76 என பெல்ஜியத்தை வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் அணி 77-65 என துருக்கியை தோற்கடித்தது.பிரேசில் வெற்றிகெய்ரோ: எகிப்தில் நடக்கும் ஆண்கள் (19 வயது) உலக ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் பிரேசில் அணி 35-28 என கினியாவை வீழ்த்தியது. ஸ்பெயின் அணி 38-35 என குரோஷியாவை வென்றது. ஜப்பான் அணி 34-32 என தென் கொரியாவை தோற்கடித்தது.வியட்நாம் அபாரம்சுரபயா: இந்தோனேஷியாவில் நடக்கும் பெண்கள் (21 வயது) உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் வியட்நாம் அணி 3-1 என செர்பியாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் அமெரிக்க அணி 3-0 என, டொமினிகன் குடியரசை வென்றது.தென் கொரியா அசத்தல்ஜெட்டா: சவுதி அரேபியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கூடைப்பந்து லீக் போட்டியில் தென் கொரியா, கத்தார் அணிகள் மோதின. இதில் தென் கொரிய அணி 97-83 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. சவுதி அரேபிய அணி 77-73 என ஜோர்டானை வீழ்த்தியது. எக்ஸ்டிராஸ்* ஜாம்ஷெட்பூரில் (ஜார்க்கண்ட்) நடந்த துாரந்த் கோப்பை கால்பந்து லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் லடாக் அணியை வீழ்த்தியது.* இந்தோனேஷியாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 6-3, 6-7, 7-6 என அமெரிக்காவின் அலெக்சாண்டர் சாங்கை வீழ்த்தினார்.* இந்தியாவுக்கு எதிரான தொடரில் (3 ஒருநாள், 2 நான்கு நாள் போட்டி) பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியில் (19 வயது) இந்திய வம்சாவளி வீரர்களான ஆர்யன் சர்மா, யாஷ் தேஷ்முக் இடம் பெற்றுள்ளனர்.* ''ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சி. இதேபோல 'பிபா' உலக கோப்பை, ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியாவுக்காக விளையாட விரும்புகிறேன்,'' என, இந்திய வீராங்கனை மணிஷா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை