உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

நியூசிலாந்து வெண்கலம்லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக கோப்பை ரக்பி, 3-4வது இடத்துக்கான போட்டியில் பிரான்ஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 42-26 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 2வது முறையாக (1991, 2025) வெண்கலம் வென்றது.பைனலில் பல்கேரியாபசே சிட்டி: பிலிப்பைன்சில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் பல்கேரியா அணி 3-1 (25-20, 23-25, 25-21, 22-25) செக்குடியரசை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் இத்தாலி அணி 3-0 (25-21, 25-22, 25-23) என போலந்தை வென்றது.ஸ்வியாடெக் முன்னேற்றம்பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-0, 6-3 என சீன வீராங்கனை யுவான் யூவை வீழ்த்தினார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-0, 6-3 என ஆஸ்திரேலியாவின் அஜ்லாவை தோற்கடித்தார்.ஆஸ்திரேலியா அசத்தல்செரம்பன்: மலேசியாவில் நடக்கும் பெண்களுக்கான (16 வயது) ஆசிய கோப்பை கூடைப்பந்து ('டிவிசன்-ஏ') அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி 87-59 என, சீனாவை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் நியூசிலாந்து அணி 68-64 என, ஜப்பானை தோற்கடித்தது.எக்ஸ்டிராஸ்* கான்பெராவில் நடந்த ஜூனியர் பெண்கள் ஹாக்கி 2வது போட்டியில் இந்திய அணி 0-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் (21 வயது) தோல்வியடைந்தது.* ஆமதாபாத்தில், ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் 11வது சீசன் இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், தனுஷ், நினா, சஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.* பிரேசிலில் இன்று துவங்கும் கிராண்ட் செஸ் டூர் பைனல்ஸ், அரையிறுதியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக்ஸிம் வாச்சியர்-லக்ரேவ் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் பேபியானோ காருணா, லெவான் ஆரோனியன் விளையாடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை