உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

வெர்ஸ்டாப்பன் முதலிடம்ஆஸ்டின்: அமெரிக்க 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தில் முதலிடம் பிடித்த, 'ரெட் புல்' அணியின் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (ஒரு மணி நேரம், 34 நிமிடம், 00.161 வினாடி) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இந்த ஆண்டில் இவர் வென்ற 4வது பட்டம்.பிரான்ஸ் பிரமாதம்ஜடார்: குரோஷியாவில் நடந்த ஐரோப்பிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பைனலில் பிரான்ஸ் அணி 3-0 என்ற கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி கோப்பை வென்றது. பெண்களுக்கான பைனலில் ஜெர்மனி அணி 3-0 என, ருமேனியாவை தோற்கடித்து சாம்பியன் ஆனது.கனடா கலக்கல்சாலே: மொராக்கோவில், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கனடா அணி 4-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தியது. மற்றொரு லீக் போட்டியில் பிரான்ஸ் அணி 4-2 என சமோவா அணியை வென்றதுரியல் மாட்ரிட் வெற்றிமாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும் 'லா லிகா' கோப்பை கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், கெடாபே அணிகள் மோதின. எம்பாப்வே ஒரு கோல் (80வது நிமிடம்) அடித்து கைகொடுக்க ரியல் மாட்ரிட் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.எக்ஸ்டிராஸ்* பஹ்ரைனில் நடக்கும் ஆசிய யூத் விளையாட்டுக்கான 'குராஷ்' போட்டியில் இந்திய வீராங்கனை குஷி (70 கிலோ) வெண்கலம் வென்றார். இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது.* அமெரிக்காவில் நடக்கும் மார்க்கெட்பீட் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றின் முதல் போட்டியில் இந்தியாவின் ஆர்யன் ஷா 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஓசான் பாரிசை வீழ்த்தினார்.* செர்பியாவில் நடக்கும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயது) 'கிரிகோ-ரோமன்' முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் கவுரவ் (63 கிலோ), அங்கித் (77), ரோகித் (87), ஜோகிந்தர் ரதி (130) தோல்வியடைந்தனர்.* கஜகஸ்தானில் நடந்த அல்மாட்டி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் டேனியல் மெத்வெடேவ் 7-5, 4-6, 6-3 என்ற கணக்கில் பிரான்சின் கோரென்டினை வீழ்த்தி, 2 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் ஆனார். கடைசியாக 2023ல் ரோம் ஓபனில் கோப்பை வென்றிருந்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை