உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக ஸ்குவாஷ்: அனாஹத் தகுதி

உலக ஸ்குவாஷ்: அனாஹத் தகுதி

கோலாலம்பூர்: உலக ஸ்குவாஷ் தொடருக்கு இந்தியாவின் அனாஹத் சிங், வீர் சோட்ரானி தகுதி பெற்றனர்.அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9--17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், ஹாங்காங்கின் டோபி சே மோதினர். இதில் அசத்திய அனாஹத் 3-1 (11-4, 9-11, 11-2, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வீர் சோட்ரானி, மலேசியாவின் அமீஷன்ராஜ் சந்திரன் மோதினர். அபாரமாக ஆடிய வீர் சோட்ரானி 3-0 (11-3, 11-4, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.தகுதிச் சுற்று பைனலில் அசத்திய அனாஹத், வீர் சோட்ரானி, உலக சாம்பியன்ஷிப் தொடரில் முதன்முறையாக களமிறங்க உள்ளனர். ஏற்கனவே ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கு இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், அபே சிங், ரமித் டான்டன், நேரடியாக தகுதி பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி