உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக பளுதுாக்குதல்: தனுஷ் வெண்கலம்

உலக பளுதுாக்குதல்: தனுஷ் வெண்கலம்

லியோன்: உலக ஜூனியர் பளுதுாக்குதலில் இந்தியாவின் தனுஷ் வெண்கலம் வென்றார்.ஸ்பெயினில், உலக ஜூனியர் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவில் தமிழகத்தின் தனுஷ் லோகநாதன் 17, பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 107 கிலோ பளுதுாக்கி 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்ற தனுஷ், 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 124 கிலோ துாக்கி, 13வது இடத்தை கைப்பற்றினார்.ஒட்டுமொத்தமாக 231 கிலோ (107+124) பளுதுாக்கிய தனுஷ், 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் உலக ஜூனியர் பளுதுாக்குதலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாறு படைத்தார்.வியட்நாமின் டுவாங் (253 கிலோ), ஜப்பானின் டொமாரி கோடாரோ (247 கிலோ) முறையே தங்கம், வெள்ளி வென்றனர்.பெண்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பாயல் பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் 68, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 82 என, ஒட்டுமொத்தமாக 150 கிலோ பளுதுாக்கிய பாயல், 6வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை