உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / எட்வர்ட்ஸ் சாதனை முறியடிக்கப்படுமா... * உலக தடகள சாம்பியன்ஷிப்பில் எதிர்பார்ப்பு

எட்வர்ட்ஸ் சாதனை முறியடிக்கப்படுமா... * உலக தடகள சாம்பியன்ஷிப்பில் எதிர்பார்ப்பு

லண்டன்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஜோனாதன் எட்வர்ட்சின் சாதனை முறியடிக்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 13-21ல் நடக்க உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் சாதனை படைக்க தயாராகி வருகின்றனர். தடகள வரலாற்றில் 30 ஆண்டுக்கும் மேலாக பல சாதனைகள் முறியடிக்கப்படாமல் உள்ளன.பெண்களுக்கான தடகளத்தில் அமெரிக்காவின் கிரிபித் ஜாய்னர் (1988ல் 100 மீ.,ல் 10.49, 200 மீ.,ல் 21.34), ரஷ்யாவின் கலினா கிறிஸ்டியகோவா (1988ல், நீளம் தாண்டுதல் 7.52 மீ.,) சாதனைகள், 37 ஆண்டுகளாக நீடிக்கிறது.இங்கிலாந்தின் 'டிரிபிள் ஜம்ப்' வீரர் ஜோனாதன் எட்வர்ட்ஸ் 50, கடந்த 1995, ஆக. 7ல் 18.29 மீ., துாரம் தாண்டினார். இவரது 30 ஆண்டு சாதனை நீடிக்கிறது.இதுகுறித்து ஜோனாதன் கூறியது:திறமையான நட்சத்திரங்கள் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில் வேறு விளையாட்டுகளை தேர்வு செய்கின்றனர். 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் அதிக வருமானம் கிடைக்காது. இதனால் தான் எனது சாதனை 30 ஆண்டுகளாகியும் இன்னும் முறியடிக்கப்படவில்லை. இது தடகளத்துக்கு நல்ல செய்தி அல்ல.தடகள நட்சத்திரங்களிடம் இயற்கையாகவே குதிக்கும் தன்மை இருக்க வேண்டும். 'டிரிபிள் ஜம்ப்' போட்டிக்கு அதிக சக்தி தேவைப்படும். இப்போது கார்பன் பைபர் பிளேட் கொண்ட 'ஷூக்கள்' பயன்படுத்துகின்றனர். இவை போட்டியின் போது பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தாது.தற்போது இந்த சாதனை நீண்ட ஆண்டுகளாக எனக்குள் தொடர்ந்து வருகிறது. வரும் உலக தடகளத்தில் இதை முறியடித்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தொடரும் 'டாப்-5' சாதனைகள்...ஆண்களுக்கான தடகளத்தில் நீண்ட ஆண்டுகளாக தொடரும் 'டாப்-5' சாதனைகள்:போட்டி வீரர்/நாடு சாதனை ஆண்டு'ஹேம்மர் த்ரோ' யூரி செடிக்/ரஷ்யா 86.74 மீ., 1986, ஆக. 30நீளம் தாண்டுதல் மைக் பாவெல்/அமெரிக்கா 8.95 மீ., 1991, ஆக. 30உயரம் தாண்டுதல் சோடோமேயர்/கியூபா 2.45 மீ., 1993, ஜூலை 274*400 மீ., 'ரிலே' அமெரிக்க அணி 2:54.29 நிமிடம் 1993, ஆக. 22'டிரிபிள் ஜம்ப்' ஜோனாதன்/இங்கிலாந்து 18.29 மீ., 1995, ஆக. 7பிரவீன் சித்ரவேல் முதலிடம்இந்திய அளவில் 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், தேசிய சாதனையாளராக திகழ்கிறார். இவர் அதிகபட்சம் 17.37 மீ., துாரம் தாண்டியுள்ளார்.98.48 மீ., உலக தடகளத்தில் ஈட்டி எறிதலில் செக் குடியரசின் ஜெலஸ்னி (நீரஜ் சோப்ரா பயிற்சியாளர்), 1996, மே 25ல் அதிகபட்சம் 98.48 மீ., துாரம் எறிந்து சாதனை படைத்தார். இன்று வரை இது தகர்க்கப்படவில்லை.* தடகளத்தின் 'மின்னல் மனிதன்' ஜமைக்காவின் உசைன் போல்ட், 2009 உலக சாம்பியன்ஷிப்பில் 100 மீ., (9.58 வினாடி), 200 மீ., (19.19) ஓட்டத்தில் சாதித்தது, இன்னும் மாறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை