உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பாரா உலக தடகளம்: இந்தியா தடுமாற்றம் * பல்கேரிய வீரர் சாதனை

பாரா உலக தடகளம்: இந்தியா தடுமாற்றம் * பல்கேரிய வீரர் சாதனை

புதுடில்லி: உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் இரண்டாவது நாளில் இந்திய நட்சத்திரங்கள் ஏமாற்றினர்.இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப். 57 பிரிவு பைனல் நடந்தது. இந்தியாவின் பிரவீன் குமார் கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 41.92 மீ., எறிந்து, 9வது இடம் பிடித்தார். இந்தியாவின் மற்றொரு வீரர் ஹேம் சந்திரா (41.17 மீ.,) கடைசி இடம் (10) பெற்றார்.ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் (டி 47) இந்தியாவின் விகாஷ், 6.96 மீ., மட்டும் தாண்டி, 6 வது இடம் பெற்று, பதக்க வாய்ப்பை இழந்தார். மற்றொரு இந்திய வீரர் அஜய் சிங் (6.31 மீ.,) 10 வது இடம் பிடித்தார்.ஆண்களுக்கான 100 மீ., டி 37 பிரிவு பைனல் நடந்தது. இந்திய வீரர்கள் ராகேஷ்பாய் (11.88 வினாடி), ஷ்ரேயான்ஸ் (12.18) கடைசி இரு இடம் (7, 8) பெற்றனர்.ருஜ்தி சாதனைஆண்களுக்கான குண்டு எறிதல் (எப் 55) போட்டி நடந்தது. பல்கேரியாவின் ருஜ்தி, 12.94 மீ., துாரம் எறிந்து, புதிய உலக சாதனை படைத்து தங்கம் கைப்பற்றினார். முன்னதாக இவர், 2023ல் 12.68 மீ., துாரம் எறிந்து இருந்தார். செர்பியாவின் நபோஜ்சா (12.52), போலந்தின் ஸ்டால்ட்மன் (12.02) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.இதுவரை தலா ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் மட்டும் வென்ற இந்தியா, பட்டியலில் 12வது இடத்தில் உள்ளது. பிரேசில் (3 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம், மொத்தம் 10), சீனா (3+4+2=9), உக்ரைன் (2+1+1=4) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை