விஷ்வஜித் வெண்கலம்
திரானா: அல்பேனியாவில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் (23 வயதுக்குட்பட்ட) போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 'கிரிகோ ரோமன்' 55 கிலோ பிரிவில் இந்தியாவின் விஷ்வஜித் பங்கேற்றார். ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற இவர், முதல் இரு போட்டியில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த அரையிறுதியில், விஷ்வஜித், 5-14 என, ஈரானின் அலி அகமதுவிடம் தோற்றார். பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விஷ்வஜித், 14-10 என உஸ்பெகிஸ்தான் வீரர் ஆடம் உல்பாஷேவை வீழ்த்தி, அசத்தினார். பெண்களுக்கான பிரீஸ்டைல், 59 கிலோ பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் அஞ்சலி, இத்தாலியின் ருஸ்சோவை வென்று பைனலுக்குள் நுழைந்தார்.