உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உஷூ: இந்தியாவுக்கு 4 பதக்கம்

உஷூ: இந்தியாவுக்கு 4 பதக்கம்

பிரேசிலியா: உலக உஷூ தொடரில் இந்தியாவுக்கு 4 பதக்கம் கிடைத்தது.பிரேசிலில், உலக உஷூ சாம்பியன்ஷிப் 17வது சீசன் நடந்தது. பெண்களுக்கான 'சாண்டா' பிரிவு பைனலுக்கு, இந்தியாவின் அபர்ணா (52 கிலோ), கரீனா கவுசிக் (60 கிலோ), ஷிவானி (75 கிலோ) முன்னேறினர். உலக உஷூ வரலாற்றில், முதன்முறையாக ஒரு சீசனில் 3 இந்திய வீராங்கனைகள் பைனலுக்குள் நுழைந்தனர். பைனலில் ஏமாற்றிய இவர்கள், வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தனர்.ஆண்களுக்கான 'சாண்டா' பிரிவு அரையிறுதியில் (56 கிலோ) இந்தியாவின் சாகர் தஹியா 0-2 என, பிலிப்பைன்சின் கார்லஸ் பேலோஸ் ஜூனியரிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீரர் விக்ராந்த் (75 கிலோ), காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறினார்.இத்தொடரில் இந்தியாவுக்கு 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 4 பதக்கம் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை