கோப்பை வென்றார் அனிசிமோவா: சீன ஓபன் டென்னிசில்
பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் அனிசிமோவா சாம்பியன் பட்டம் வென்றார்.பீஜிங்கில், டபிள்யு.டி.ஏ., சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா, செக்குடியரசின் லிண்டா நோஸ்கோவா மோதினர். முதல் செட்டை 6-0 எனக் கைப்பற்றிய அனிசிமோவா, 2வது செட்டை 2-6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.ஒரு மணி நேரம், 46 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அமண்டா அனிசிமோவா 6-0, 2-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது, இவரது 4வது டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பட்டம் ஆனது.இரட்டையர் பிரிவு பைனலில் இத்தாலியின் சாரா இரானி, ஜாஸ்மின் பாவோலினி ஜோடி 6-7, 6-3, 10-2 என்ற கணக்கில் ஜப்பானின் மியு கடோ, ஹங்கேரியின் ஸ்டோலர் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.