மேலும் செய்திகள்
டேவிஸ் கோப்பை: இந்தியா வெற்றி
08-Feb-2026
நாக்பூர்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறினார் அஞ்சலி ரதி.இந்தியாவின் நாக்பூரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் தகுதிசுற்று இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அஞ்சலி ரதி 18, ஜப்பானின் மிச்சிகாவை சந்தித்தார். இதில் அஞ்சலி 6-3, 6-2 என நேர் செட்டில் வெற்றி பெற்று, பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். நேற்று நடந்த முதல் சுற்றில் இந்தியாவின் சோனல், சக வீராங்கனை மைதிலியை 6-0, 6-1 என வென்றார். மற்றொரு போட்டியில் சோகா சாதிக், சக வீராங்கனை சவ்ஜன்யாவை 6-2, 2-6, 6-2 என வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி, இந்தியாவின் சவ்ஜன்யா, ஜப்பானின் ஹசேகவா ஜோடியை எதிர்கொண்டது.இதில் இந்திய ஜோடி 6-2, 6-1 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
08-Feb-2026