உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / பைனலில் சின்னர்-அல்காரஸ்: சின்சினாட்டி ஓபன் டென்னிசில்

பைனலில் சின்னர்-அல்காரஸ்: சின்சினாட்டி ஓபன் டென்னிசில்

சின்சினாட்டி: சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இத்தாலியின் சின்னர், ஸ்பெயினின் அல்காரஸ் முன்னேறினர்.அமெரிக்காவில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர், பிரான்சின் டெரன்ஸ் அட்மேன் (136வது இடம்) மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' சின்னர் 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.மற்றொரு அரையிறுதியில் உலகின் 'நம்பர்-2' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 3வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். இதில் அல்காரஸ் 6-4, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.பைனலில் சின்னர், அல்காரஸ் மோதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ