உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / கோகோ காப்-சினியகோவா சாம்பியன்: பிரெஞ்ச் ஓபன் இரட்டையரில்

கோகோ காப்-சினியகோவா சாம்பியன்: பிரெஞ்ச் ஓபன் இரட்டையரில்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இரட்டையரில் அமெரிக்காவின் கோகோ காப், செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் இரட்டையர் பைனலில் அமெரிக்காவின் கோகோ காப், செக்குடியரசின் கேத்ரினா சினியகோவா ஜோடி, இத்தாலியின் சாரா இரானி, ஜாஸ்மின் பவுலினி ஜோடியை எதிர்கொண்டது.'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய கோகோ காப், சினியகோவா ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றது. ஒரு மணி நேரம், 47 நிமிடம் நீடித்த போட்டியில் கோகோ காப், சினியகோவா ஜோடி 7-6, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றது.இது, பெண்கள் இரட்டையரில் கோகோ காப் கைப்பற்றிய முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம். சினியகோவா வென்ற 8வது பெண்கள் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம். இவர், ஆஸ்திரேலிய ஓபனில் 2 (2022, 2023), பிரெஞ்ச் ஓபனில் 3 (2018, 2021, 2024), விம்பிள்டனில் 2 (2018, 2022), யு.எஸ்., ஓபனில் ஒரு முறை (2022) கோப்பை வென்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி