உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / கண்ணாடியும் காகித மந்திரமும்: கோகோ காப் கோப்பை ரகசியம்

கண்ணாடியும் காகித மந்திரமும்: கோகோ காப் கோப்பை ரகசியம்

பாரிஸ்: சர்வதேச டென்னிஸ் அரங்கில் அசைக்க முடியாத நட்சத்திரமாக ஜொலிக்கிறார் கோகோ காப். தன்னம்பிக்கையுடன் விளையாடி பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றார்.பாரிசில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலில், உலகின் 'நம்பர்-2' வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், பெலாரசின் சபலென்காவை 27, (நம்பர்-1) வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்றார். இது, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இவரது 2வது பட்டம். முன்னதாக 2023ல் யு.எஸ்., ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.கடந்த 2022ல் நடந்த பிரெஞ்ச் ஓபன் பைனலில் போலந்தின் ஸ்வியாடெக்கிடம் தோற்ற கோகோ காப், கோப்பையை கோட்டைவிட்டார். இம்முறை உறுதியுடன் போராடி, சாம்பியன் பட்டம் வென்றார். இது குறித்து இளம் கோகோ காப் 21, கூறியது: பாரிஸ் ஒலிம்பிக் (2024), 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை கேபி தாமசை பின்பற்றினேன். இவர், 'ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன்' என தொடர்ந்து எழுதி வந்தார். இதற்கு ஏற்ப சாதித்துக் காட்டினார். இவரை போல நானும் பைனலுக்கு முன் ஒரு சிறிய காகிதத்தில் '2025ல் பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்வேன்' என 8 முறை எழுதினேன். பின் கண்ணாடி முன் முகத்தை பார்த்து, 'நானே சாம்பியன்' என்ற தன்னம்பிக்கையை என்னுள் விதைத்துக் கொண்டேன். இவை எல்லாம் பயன் அளிக்குமா என அப்போது தெரியாது. ஆனாலும் சாம்பியன் இலக்கை எட்டுவதற்கு தன்னம்பிக்கை தரும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.பைனலின் போது பலத்த காற்று வீசியது. இதை பொருட்படுத்தாமல் வெற்றி பெறுவதில் உறுதியாக இருந்தேன். எனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மிகவும் 'கூலாக' விளையாடினேன். இறுதியில் கோப்பை வென்றது மகிழ்ச்சி அளித்தது.இவ்வாறு கோகோ காப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி