உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / இத்தாலி அணி சாம்பியன்: பில்லி ஜீன் கிங் கோப்பையில்

இத்தாலி அணி சாம்பியன்: பில்லி ஜீன் கிங் கோப்பையில்

மலகா: பில்லி ஜீன் கிங் கோப்பையில் இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 2-0 என சுலோவாகியாவை வென்றது.ஸ்பெயினில், பெண்கள் அணிகளுக்கான 'பில்லி ஜீன் கிங் கோப்பை பைனல்ஸ்' டென்னிஸ் நடந்தது. இதன் பைனலில் இத்தாலி, சுலோவாகியா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இத்தாலியின் லுாசியா 6-2, 6-4 என சுலோவாகியாவின் விக்டோரியாவை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-2, 6-1 என சுலோவாகியாவின் ரெபெக்காவை வென்றார்.முடிவில் இத்தாலி அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக கோப்பை வென்றது. இதற்கு முன் 2006, 2009, 2010, 2013ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. அதிகபட்சமாக அமெரிக்கா 18 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை