உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஐ.டி.எப்., டென்னிஸ்: அரையிறுதியில் சசிகுமார்

ஐ.டி.எப்., டென்னிஸ்: அரையிறுதியில் சசிகுமார்

லுவான்: சீனாவில், ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சீனதைபேயின் சுங்-ஹாவோ ஹுவாங் மோதினர். அபாரமாக ஆடிய சசிகுமார் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சித்தார்த் விஷ்வகர்மா, அமெரிக்காவின் இவான் ஜு மோதினர். இதில் அசத்திய சித்தார்த் 6-3, 2-6, 6-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை