உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஜெய் மீனா வெண்கலம்: ஆசிய சாப்ட் டென்னிசில் வரலாறு

ஜெய் மீனா வெண்கலம்: ஆசிய சாப்ட் டென்னிசில் வரலாறு

சியோல்: ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் ஒற்றையரில் இந்திய வீரர் ஜெய் மீனா வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்.தென் கொரியாவில், ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் 9வது சீசன் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஜெய் மீனா 4-1 என, சீனாவின் லி ரன் செங்கை வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஜெய் மீனா, சீனதைபேயின் சென் போ யி மோதினர். இதில் ஏமாற்றிய ஜெய் 1-4 என தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் ஆசிய 'சாப்ட்' டென்னிஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.இந்திய போல்ட் வால்ட் வீரர் தேவ் குமார் மீனாவின் உறவினரான ஜெய் மீனா, கடந்த ஆண்டு சீனாவில் நடந்த உலக 'சாப்ட்' டென்னிஸ் சாம்பியன்ஷிப் கலப்பு இரட்டையரில் ஆத்யா திவாரியுடன் இணைந்து வெண்கலம் வென்ற வரலாறு படைத்திருந்தார். தவிர இவர், 2023ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டில் காலிறுதி வரை சென்றிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !