உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / இரண்டாவது சுற்றில் சபலென்கா: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்

இரண்டாவது சுற்றில் சபலென்கா: ஆஸி., ஓபனில் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றுக்கு பெலாரசின் சபலென்கா முன்னேறினார்.மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் பிரதான சுற்று நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 'நடப்பு சாம்பியன்' பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் மோதினர். சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.மற்றொரு முதல் சுற்றில் பாரிஸ் ஒலிம்பிக் ஒற்றையரில் தங்கம் வென்ற சீனாவின் கின்வென் ஜெங் 7-6, 6-1 என ருமேனியாவின் அன்கா டோடோனியை வீழ்த்தினார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ், ஸ்பெயினின் பவுலா படோசா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.ஸ்வெரேவ் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் லுாகாஸ் பவுல் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வெரேவ் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 2வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என ஸ்பெயினின் ஜாம் முனாரை போராடி தோற்கடித்தார். மற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, பிரான்சின் யூகோ ஹம்பர்ட், ஹுகோ காஸ்டன், அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

சுமித் நாகல் ஏமாற்றம்

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், செக்குடியரசின் தாமஸ் மச்சாக் மோதினர். இதில் ஏமாற்றிய சுமித் நாகல் 3-6, 1-6, 5-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். லெபனான் வீரர் சாதனைதகுதிச் சுற்றில் அசத்திய ஹாடி ஹபீப், கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரதான சுற்றுக்கு முன்னேறிய முதல் லெபனான் வீரர் என்ற சாதனை படைத்தார். நேற்று நடந்த முதல் சுற்றில் அசத்திய இவர், 7-6, 6-4, 7-6 என சீனாவின் பு யுன்சாவோகெட்டை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை