உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / டென்னிஸ்: ஜென்சி சாம்பியன்

டென்னிஸ்: ஜென்சி சாம்பியன்

மணிலா: ஆசிய ஜூனியர் டென்னிசில் சாம்பியன் ஆனார் இந்தியாவின் ஜென்சி.பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய ஜூனியர் (14 வயது) சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜென்சி தீபக்பாய், தென் கொரியாவின் எரின் லிம்மை எதிர்கொண்டார்.விம்பிள்டன் தொடரில் பங்கேற்ற இந்தியாவின் இளம் வீராங்கனை (14 வயது) என பெருமை பெற்ற ஜென்சி, முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 14 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ஜென்சி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ