| ADDED : ஆக 21, 2024 10:34 PM
புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், விஷ்ணுவர்தன் முன்னேறினர்.தாய்லாந்தின் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த், தென் கொரியாவின் சீயுங்மின் பார்க்ககை எதிர்கொண்டார். இதில் சசிக்குமார் 6-3, 6-1 என எளிதாக வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் விஷ்ணுவர்தன், ஆஸ்திரேலியாவின் ஜேடன் கோர்ட் மோதினர். இப்போட்டியில் விஷ்ணுவர்தன் 7-6, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்திய வீரர் நிதின்குமார் சின்ஹா, 6-3, 1-6, 7-6 என தென் கொரியாவின் ஜியாங்கை வீழ்த்தினார்.