உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / இரண்டாவது சுற்றில் வைதேகி

இரண்டாவது சுற்றில் வைதேகி

புதுடில்லி: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி வெற்றி பெற்றார்.கஜகஸ்தானில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் வைதேகி சவுத்ரி, கஜகஸ்தானின் கிரிம்கோவா மோதினர்.முதல் செட்டை வைதேகி 6-0 என கைப்பற்றினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட வைதேகி அடுத்த செட்டையும் 6-2 என எளிதாக வசப்படுத்தினார்.53 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் வைதேகி 6-0, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இதில் ரஷ்யாவின் பெடோரோவாவை சந்திக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை