உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / விம்பிள்டன்: பைனலில் அல்காரஸ்

விம்பிள்டன்: பைனலில் அல்காரஸ்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு முன்னேறினார் அல்காரஸ்.இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி நடந்தன. உலகின் 'நம்பர்-3' வீரர், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், 'நம்பர்-5' வீரர், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். 2 மணி நேரம், 55 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அல்காரஸ் 6-7, 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.யார் சாம்பியன்பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடக்கும் பைனலில் 'நம்பர்-7' வீராங்கனை இத்தாலியின் ஜாஸ்மின் பாவ்லினி, 'நம்பர் 31' ஆக உள்ள செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.இதில் பாவ்லினி, 2016ல் செரினா வில்லியம்சிற்கு அடுத்து தொடர்ந்து இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் (பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன்) பைனலுக்கு முன்னேறிய வீராங்கனை ஆனார். விம்பிள்டன் ஒற்றையர் பைனலுக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீராங்கனை பாவ்லினி.இருவரும் முதன் முறையாக விம்பிள்டன் பைனலில் மோத உள்ளனர். இதில் வெல்லும் வீராங்கனை, முதல் விம்பிள்டன் கோப்பை கைப்பற்றலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ