டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ்: அரையிறுதியில் அனிசிமோவா
ரியாத்: டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் அரையிறுதிக்கு அமெரிக்காவின் அனிசிமோவா முன்னேறினார்.சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், டபிள்யு.டி.ஏ., 'பைனல்ஸ்' டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில், உலகின் 'டாப்-8' வீராங்கனைகள், 'ஸ்டெபி கிராப்', 'செரினா வில்லியம்ஸ்' என இரு பிரிவுகளாக 'ரவுண்டு ராபின்' முறையில் லீக் சுற்றில் விளையாடுகின்றனர்.'செரினா' பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து), அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), எலினா ரிபாகினா (கஜகஸ்தான்), எகடரினா அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா) இடம் பெற்றுள்ளனர். இதன் கடைசி சுற்று லீக் போட்டியில் அனிசிமோவா 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக்கை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் ரிபாகினா 6-4, 6-4 என எகடரினாவை தோற்கடித்தார்.முடிவில், இப்பிரிவில் முதலிரண்டு இடம் பிடித்த ரிபாகினா, அனிசிமோவா அரையிறுதிக்குள் நுழைந்தனர். ஸ்வியாடெக், எகடரினா வெளியேறினர்.