போன் பேசியபடி பைக் ஓட்டியவர் லாரியில் மோதி மரணம்
அரியலுார்: அரியலுார் அருகே, மொபைல் போனில் பேசியபடி பைக் ஓட்டிச் சென்ற வாலிபர், நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் மோதி இறந்தார். அரியலுார் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 21. இவர், நேற்று காலை, தன் மாமாவுக்கு சொந்தமான டூ - வீலரில், பெரம்பலுாரில் இருந்து அரியலுார் நோக்கி, மொபைல் போனில் பேசிய படியே சென்று கொண்டிருந்தார். அப்போது, அரியலுார் தங்கநகரம் அருகே சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரியை கவனிக்காமல், அதன் பின்புறம் மோதினார். இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.