கணவர் குத்திக்கொலை பாசக்கார மனைவி கைது
அரியலுார்:அரியலுார் மாவட்டம், செந்துறை அருகே ஆனந்தவாடி, மேலத்தெருவைச் சேர்ந்தவர் சின்னப்பா, 45. இவரது மனைவி பச்சையம்மாள், 43. இவர்களது மகன் பாலமுருகன், 23; சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை, சின்னப்பா தன் வீட்டில் சடலமாக கிடந்தது தெரிய வந்தது.இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரித்தனர். இதில், சின்னப்பா, தன் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை அவரது மகன் பாலமுருகன் பெயருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன் எழுதிக் கொடுத்துள்ளார். அதுமுதல் தினமும் மது போதையில் மனைவியிடம், 'என்னை ஏமாற்றி என் நிலத்தை எழுதி வாங்கிக் கொண்டாய்' என, தகராறு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவும், மனைவி, மகனை அடித்துள்ளார்.ஆத்திரமடைந்த பழனியம்மாள் கத்தியால் தாக்கி, கால், கை நரம்பை துண்டித்து, கணவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது. பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர்.