மேலும் செய்திகள்
உளுந்து வடையில் பூரான் சாப்பிட்டோருக்கு மயக்கம்
17-Oct-2024
அரியலுார் மாவட்டம், செந்துறை கிராமத்தில், உடையார்பாளையம் செல்லும் சாலையிலுள்ள ஒரு பேக்கரி கடையில், போண்டா, வடை உள்ளிட்ட பலகாரங்களுடன் டீ, காபியும் விற்கப்படுகின்றன. இங்கு எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில், நேற்று அந்த கடையில் செந்துறையைச் சேர்ந்த வேல்முருகன் மகன் தமிழ் அழகன், 16, ராமச்சந்திரன் மகன் ராகுல், 16, பச்சமுத்து மகன் முத்துமாறன்,14, ஆகியோர் போண்டா வாங்கி சாப்பிட்டனர்.அப்போது, ஒரு போண்டாவில் பல்லி இறந்து கிடந்தது. இதை கண்ட மூவரும் வாந்தி எடுத்தனர். மயக்கம் அடைந்த மூவரையும், செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.இது குறித்து செந்துறை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் விசாரிக்கின்றனர்.
17-Oct-2024