உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எஸ்.ஆர்.எம்., பல்கலையில் பொங்கல் கொண்டாட்டம்

எஸ்.ஆர்.எம்., பல்கலையில் பொங்கல் கொண்டாட்டம்

மறைமலைநகர் : மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில், எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை எஸ்.ஆர்.எம்., கல்வி குழும நிறுவனர் பாரிவேந்தர் துவக்கி வைத்தார். இதில், 60 வெளிநாட்டு மாணவ -- மாணவியர் உட்பட 15,000த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரிய கலைகளான தாரை தப்பட்டை, நாதஸ்வரம், குயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் 15 துறைகளின் சார்பில், 15 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. மாணவர்கள் உருவாக்கிய ரோபோ பாட்டுப் பாடி நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை