உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / களைகட்டும் கல்வி சுற்றுலா

களைகட்டும் கல்வி சுற்றுலா

மாமல்லபுரம் சிற்பங்கள் காண, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் குவிந்து, கல்வி சுற்றுலா களைகட்டுகிறது.மாமல்லபுரம் மாமல்லபுரத்தில் பல்லவர் கால கலைச்சின்னங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை, உள்நாடு, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, ஆண்டுதோறும் டிச., - ஜன.,ல், கல்வி சுற்றுலாவாக, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இங்கு படையெடுப்பர்.அவர்களின் சுற்றுலா, தற்போது களைகட்டுகிறது. வேன், பஸ் ஆகியவற்றில், இங்கு படையெடுக்கின்றனர். சிற்பங்கள், கலங்கரைவிளக்கம், கடற்கரை ஆகியவற்றை கண்டும், குடவரை குன்றுகளில் ஏறியும் குதுாகலமடைகின்றனர். சிற்பங்கள் குறித்து, ஆசிரியர்கள் விளக்குவதை கேட்டு வியக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை