உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 1,062 பீர் பாட்டில்கள் 160 மதுபாட்டில் பறிமுதல்

1,062 பீர் பாட்டில்கள் 160 மதுபாட்டில் பறிமுதல்

சென்னை, அடையாறு மதுவிலக்கு அலமாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் திருவான்மியூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரிந்தது. வாகனத்தில் இருந்த இருவரிடம் விசாரித்தனர். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுனில், 35, கொடுங்கையூரைச் சேர்ந்த கலைவாணன், 34 என்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 1,062 பீர் பாட்டில்கள், 1 லிட்டர் அளவுள்ள 160 மதுபாட்டில்கள், சரக்கு வாகனம், 2 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ