உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 12 ஆண்டு தலைமறைவு; ஆயுள் கைதி பிடிபட்டார்

12 ஆண்டு தலைமறைவு; ஆயுள் கைதி பிடிபட்டார்

சென்னை : கடந்த, 1999ல், பரங்கிமலை காவல் நிலைய எல்லையில், ராஜேந்திரன் என்பவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, ஆலந்துார் அலிகான் தெருவைச் சேர்ந்த கண்ணன் உட்பட, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, பூந்தமல்லி 4வது விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. கண்ணன் உட்பட நான்கு பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்களில், கண்ணன், 2012, ஜன., 28ல், சென்னை, திருமங்கலத்தில் வசித்து வரும் பெற்றோரை பார்க்க வேண்டும் என, பரோலில் சென்று தலைமறைவானார். இவர் மீது திருமங்கலம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.அதன்பின், திருமங்கலம் மற்றும் பரங்கிமலை போலீசாரிடம் சிக்காமல் கண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், குமார், 42, என்பவரிடம், இரு தினங்களுக்கு முன் பரங்கிமலை பகுதியில் கண்ணன், 56, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து தப்பியது தெரியவந்தது.தொடர் விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பெயின்டர் வேலை செய்து, தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு முகாமிட்டு, கண்ணனை கைது செய்து மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை