உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுார் பூங்காவிற்கு ரூ.3 லட்சம் நிதி

வண்டலுார் பூங்காவிற்கு ரூ.3 லட்சம் நிதி

தாம்பரம்:வன விலங்கு பாதுகாப்பிற்காக, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு, சமூக சேவகர் அப்சரா ரெட்டி தலைமையிலான 'குட் டீட்ஸ் கிளப்' சார்பில், 3 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்று, வண்டலுார் பூங்கா இயக்குனர் ஆஷிஷ்குமார் ஸ்ரீவச்சவாவிடம், நேற்று முன்தினம் இந்த நிதியை வழங்கினார்.வாழ்விட மேம்பாடு, விலங்கு பராமரிப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரிடையே வன விலங்குகள் குறித்த விழிப்புணர்வு, வடிவமைக்கப்பட்ட கல்வி திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படும் என, பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ