செங்கையில் 405 ஏரிகள் நிரம்பின
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த மழையில், நேற்று வரை 405 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 620 ஏரிகளில், 398 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. 2,512 குளங்களில், 1,878 குளங்கள் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளன. நீர் நிலை பகுதிகளில் நீர்வளத்துறை, ஊராட்சி செயலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.