உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடலில் சிக்கியவரை மீட்க உயிர் காப்பாளர் நியமனம்

கடலில் சிக்கியவரை மீட்க உயிர் காப்பாளர் நியமனம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வரும் பயணியர், கடலில் ஆர்வமாகக் குளிக்கின்றனர். இப்பகுதி கடலின் அபாயம் அறியாமல் குளிப்பதால், பலர் அலையில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இதற்கு தீர்வு காண வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந் தனர். தொடர்ந்து, சுற்றுலாபயணியர் பாதுகாப்பு கருதி, உயிர் காப்பாளரை நியமனம் செய்ய, மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சிக்கு, கலெக்டர்உத்தரவிட்டார்.அதன்படி, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், ஒப்பந்த ஊழியர் கிருஷ்ணராஜ்நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான பணி ஆணையை, கலெக்டர் அலுவலகத்தில், கிருஷ்ணராஜுக்கு கலெக்டர் அருண்ராஜ், நேற்று முன்தினம்வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ