உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீட்டில் நிறுத்திய சொகுசு கார் தீப்பிடித்து நாசம்

வீட்டில் நிறுத்திய சொகுசு கார் தீப்பிடித்து நாசம்

குரோம்பேட்டை:பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை ஒட்டியுள்ள, சூர்ய ஆவென்யூ பகுதியை சேர்ந்தவர் சதீஷ், 29. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு சொந்தமான பி.எம்.டபுள்யு., என்ற சொகுசு கார், பழுதானது. இதையடுத்து, சென்னையில் உள்ள பழுது பார்க்கும் கடையில் சர்வீஸ் செய்து, வீட்டின் வெளியே காரை நிறுத்தியிருந்தார்.நேற்று முன்தின் இரவு, வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து புகை வெளியேறியது. சற்று நேரத்தில், தீ பரவி மளமளவென எரிந்தது. அக்கம் பக்கத்தினர் முயற்சி செய்தும், தீயை அணைக்க முடியவில்லை.தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, சிட்லப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்