உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக செல்லும் மின் கம்பி; விழுதமங்கலத்தில் ஆபத்து

தாழ்வாக செல்லும் மின் கம்பி; விழுதமங்கலத்தில் ஆபத்து

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே விழுதமங்கலம் விநாயகர் கோவில் தெருவில், குடியிருப்புகளுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகள் தாழ்வாக தொங்கியபடி செல்கின்றன.அதனால், அப்பகுதி வழியாக செல்லும் லாரி, பேருந்து மற்றும் கனரக வாகனங்கள், தாழ்வாக தொங்கும் மின் கம்பியில் உரசி, விபத்து ஏற்படும் நிலை உள்ளது.மேலும், கிராம மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில், வீடுகள் அருகே மின் கம்பிகள் செல்வதால், விபத்து அச்சத்துடன் தினசரி அப்பகுதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், மின் கம்பிகளால் விபத்து ஏற்படுவதற்கு முன், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ