உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / களத்துாரில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

களத்துாரில் 9 ஆண்டுகளாக திறக்கப்படாத ரேஷன் கடை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட களத்துார் ஊராட்சியில், ஜே.ஜே., நகர் குடியிருப்பு பகுதியில், அம்மக்களின் தேவைக்காக, கரசங்கால்- - கொங்கரை சாலையில், 2015 -- 16ல், 6.50 லட்சம் ரூபாய் மதிப்பில், நியாய விலைக் கடை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.கட்டடம் கட்டி முடித்து, 9 ஆண்டுகள் ஆன நிலையில், கட்டடம் திறக்கப்படாததால், அரசு பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.தற்போது, வெயில், மழை காலங்களில், இரண்டு கி.மீ., துாரத்தில் உள்ள களத்துார் கிராமத்திற்கு சென்று, ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, புதிதாககட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர, உரிய துறை சார்ந்தஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ