உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்

தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உயர்த்தி அமைக்க வேண்டுகோள்

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அடுத்த தேவாதுார் கிராமத்தில், மதுராந்தகம் செல்லும் சாலை ஓரத்தில், ஏரி உபரிநீர் கால்வாய் உள்ளது.இதன் அருகே, வயல்வெளியில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள், தலையில் முட்டும் அளவிற்கு தாழ்வாக செல்கின்றன.அதனால், அப்பகுதி விவசாயிகள், டிராக்டர்கள் மற்றும் நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், அந்த வழியாக நடந்து செல்லவே, விவசாயிகள் அச்சப்படுகின்றனர். வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளால் உயிரிழக்கும் நிலையில் உள்ளது.எனவே, துறை சார்ந்த அதிகாரிகள், விவசாய நிலத்தில் விபத்து ஏற்படும் நிலையில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை