உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ - வீலர் குறுக்கே வந்ததால் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

டூ - வீலர் குறுக்கே வந்ததால் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

மறைமலை நகர்: சிங்கபெருமாள்கோவிலில் இருந்து இரும்பு லோடு ஏற்றிக் கொண்டு, 'பொலிரோ' சரக்கு வாகனம் தாம்பரம் நோக்கி சென்றது.மறைமலை நகர் சாமியார் கேட் சந்திப்பை கடக்கும் போது, மறைமலை நகர் சிப்காட் பகுதியில் இருந்து திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, சரக்கு வாகன டிரைவர் பிரேக் பிடித்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் சாலையின் நடுவே கவிழ்ந்தது. சரக்கு வாகனத்தில் இருந்த இரும்பு கம்பிகள் நெடுஞ்சாலையில் கொட்டின.அங்கு பணியில் இருந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார், அங்கிருந்தவர்களின் உதவியுடன் வாகனத்தை மீட்டனர். இதன் காரணமாக, சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி