உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காற்றில் குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் போட் ஹவுஸில் பயனின்றி வீண்

காற்றில் குடிநீர் தயாரிக்கும் இயந்திரம் போட் ஹவுஸில் பயனின்றி வீண்

செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் ரெயின் ட்ராப் போட் - ஹவுஸ் உள்ளது.விடுமுறை நாட்களில், சென்னை, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியர் வருகை தந்து, படகுகளில் சவாரி செய்தும், கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள ஓய்வு எடுக்கும் கூடாரங்களில் அமர்ந்தும் பொழுதுபோக்குவது வழக்கம்.இங்கு, தனியார் தொண்டு நிறுவனத்தின் வாயிலாக, சென்னை ஐ.ஐ.டி.,யில் தயார் செய்யப்பட்ட, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரம், கடந்த ஆண்டு பொருத்தப்பட்டது.இந்த இயந்திரம், 2.3 மீட்டர் உயரமும், 1 டன் எடையும் கொண்டது. மின்சாரத்தின் வாயிலாக இயக்கப்படுகிறது.வெளிப்புறத்தில் இருந்து காற்று இழுக்கப்பட்டு, உட்புறம் உள்ள குளிர்ந்த 'காயிலில்' மோதும் போது காற்றின் ஈரப்பதமானது, குடிநீராக மாற்றப்பட்டு, சுத்தமாக வடிகட்டப்பட்டு குடுவையில் சேகரிக்கப்படுகிறது.காற்றோட்டத்திற்கு ஏற்ப, 700 முதல் 1,000 லிட்டர் வரை தினசரி குடிநீர் தயாரிக்கும் திறன் உடையது.இந்த இயந்திரத்தின் மின்திறன் 15 கி.வா., ஆகும். இயந்திரம் பொருத்தப்பட்டு சில தினங்கள் இயங்கி வந்த நிலையில், போதிய மின்திறன் இல்லாததால், தற்போது செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்திற்கு போதிய மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ