உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம்

விஜய் பிறந்த நாள் விழாவில் சாகச சிறுவனுக்கு தீக்காயம்

சென்னை : நடிகரும், தமிழக வெற்றி கழக தலைவருமான விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, அக்கட்சியின் சென்னை புறநகர் மாவட்ட தலைவர் சரவணன், சென்னை, இ.சி.ஆர்., நீலாங்கரையில் விழா ஏற்பாடு செய்தார். விழாவை ஒட்டி, திருவல்லிக்கேணியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ராஜன் என்பவரின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தது. இதில், மயிலாப்பூரை சேர்ந்த கிரீஷ்வா, 11, என்ற சிறுவன் ஓடு உடைக்கும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார். அடுக்கி வைத்த ஓடுகளை உடைக்கும் முன்னதாக, அதில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. அதை, சிறுவன் உடைத்த போது, கையில் ஊற்றப்பட்ட பெட்ரோலில் தீ பிடித்தது. ராஜன் தடுக்க முயன்ற போது, அவர் வைத்திருந்த கேனில் இருந்து பெட்ரோல் சிந்தியதில், அவர் கையிலும் தீ பிடித்தது. சுற்றியிருந்தவர்கள் தீயை அணைத்து, இருவரையும் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அந்த சிறுவன் சாகசம் செய்யும் போது இதெல்லாம் சகஜம் தான் என்று கூறினார். நீலாங்கரை போலீசார் கூறியதாவது: தீ வைத்து சாகச நிகழ்ச்சி நடத்த காவல் துறை, தீயணைப்பு துறை அனுமதி பெற வேண்டும். ஆம்புலன்சுடன் மருத்துவ குழுவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல், இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடு செய்யாமல், சாகச நிகழ்ச்சி நடத்திய சரவணன் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ