| ADDED : ஜூலை 28, 2024 01:35 AM
செங்கல்பட்டு:நகராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, மழைநீர் கால்வாய்கள் துார்வாரி சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்தது.செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், களத்துமேடு - பச்சையம்மன் கோவில், அண்ணாநகர், புது ஏரி, அனுந்தபுத்தேரி, ராகவனார் தெரு, வேதாசலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில், மழைநீர்கால்வாய்கள் உள்ளன. இந்த கால்வாய்கள் துார்ந்துள்ளதால், மழைக்காலங்களில் சாலையில் மழைநீருடன், கழிவுநீர் செல்கிறது. இதனால், நகர வாசிகளுக்கு பல்வேறுதொற்று நோய்ஏற்படுகிறது. இதனால், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக, இப்பகுதிகளில் மழைநீர் கால்வாய்களை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக துார்வாரி சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக, நகராட்சி நிர்வாகம் 9.80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, நகரமன்றகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இப்பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.