தின்னலுார் ஊராட்சி அலுவலக கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தின்னலுார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.ஊராட்சி அலுவலக கட்டடம் இல்லாததால், தற்போதுவரை சேவை மைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால், ஊராட்சி ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை பாதுகாப்பதில் மிக சிரமம் அடைந்தனர்.இது குறித்து, அரசுக்கு பலமுறை, ஊராட்சி நிர்வாகத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.தற்போது, ஊராட்சி நிதி 10 லட்சம் ரூபாய் மற்றும் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வளர்ச்சி உறுதி திட்டத்தின் நிதி 20 லட்சம் ரூபாய் என, மொத்தம் 30 லட்சம் ரூபாய் மதிப்பில், ஊராட்சி அலுவலகம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கட்டடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டடப் பணிகளை விரைந்து துவக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.