உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வியக்கவைத்த மயானக்கொள்ளை உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

வியக்கவைத்த மயானக்கொள்ளை உற்சவம்; பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருப்போரூர், பிப்.28- திருப்போரூர் ஒன்றியம், படூர் ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை உற்சவம் நேற்று நடந்தது. விழாவிற்கான அடிப்படை வசதிகள் உட்பட அனைத்து முன்னேற்பாடுகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்திருந்தது.காலை முதல் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. மாலை 6:00 மணியளவில் ஓ.எம்.ஆர்., சாலையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதி உலா படூர் பைபாஸ் சாலை வழியாக மயானத்தை சென்றடைந்தது.அங்கு ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வண்ணம் காய்கறிகள், பழங்கள், வேளாண் பொருட்கள் ஆகியவற்றை வாரி இறைத்தனர்.மேலும், பக்தர்கள் விரதம் இருந்து, கிரேன் வாகனம், வணிக வாகனத்தில் அந்தரத்தில் தொங்குதல், முதுகில் கொக்கி மாற்றி கல்தேர், மரத்தேர், ஆட்டோ, வேன் இழுத்தல் ஆகியவற்றை செய்தபடி ஊர்வலமாக சென்று தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.முக்தீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரிவிழாசெங்கல்பட்டு, பிப். 28-ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரிவிழா, கோலாகலமாக நடைபெற்றது.செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தர்மசம்வர்தனி அம்பிகா சமேத முக்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரிவிழா நடைபெறும். இந்த ஆண்டு, முக்தீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நேற்றுமுன்தினம் மாலை 6:00 மணிக்கு, முதல் கால பூஜை துவங்கி. நேற்றுஅதிகாலை 3:30 மணிக்கு, தர்மசம்வர்தினி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 4:00 மணிக்கு, 6ம் கால திரவிய மஹாபிஷேகம் நடைபெற்றது.அதன்பின், முக்தீஸ்வரர், தர்மசம்வர்தனி சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்தனர். இவ்விழாவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமிதரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருக்கோவில் நிர்வாகம், முக்தீஸ்வரர் சேவா சங்கம், பணியாளர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.ஆட்சீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாடுஅச்சிறுபாக்கம், பிப். 28 -அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் மஹா சிவராத்திரி விழா, நேற்று, சிறப்பாக நடந்தது.தொண்டை நாட்டு சிவத்தலங்களில் ஒன்றானதும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.நேற்று முன்தினம், மஹா சிவராத்திரி துவங்கி, நேற்று காலை வரை நான்கு கால சிறப்பு பூஜைகள் நடந்தன.பின்,கோவிலின் உட்புற வளாகத்தில், சிவசக்தி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சி, இரவு முழுவதும் நடந்தது.மஹா சிவராத்திரி சிறப்பு வழிபாட்டில் அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று, மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரர், அருளாலீஸ்வரர், கருங்குழி ரகோத்தம சுவாமிகள் கோவிலில் உள்ள ஞான லிங்கேஸ்வரர், சிறுதாமூர் அகத்தீஸ்வரர், முருங்கை முத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் மஹா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.கருங்குழியில் மஹா சிவராத்திரி விழா விமரிசைமதுராந்தகம், பிப் . 28 -மதுராந்தகம் அடுத்த கருங்குழியில்ராகவேந்திரா ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மஹா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்தது.மக்கள் சுபிஷமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது.பின், மஹாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.படம் மட்டும்:படம் மட்டும்அங்காள பரமேஸ்வரி ஆலய மயான கொள்ளை நிகழ்ச்சிஆத்தூரில் மயானக்கொள்ளை விமரிசைமறைமலைநகர்,பிப். 28-செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தில் காஞ்சிபுரம் சாலை ஓரம் உள்ள அங்காளம்மன் கோவிலில்,மாசி அமாவாசையை முன்னிட்டு,பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து, காளி வேடமணிந்து கோவிலில் இருந்து பாலாற்று பகுதியில் உள்ள சுடுகாடு வரை அருள் வந்து ஆடியபடி வந்தனர்.அலகு குத்துத்தி லாரி உள்ளிட்ட வானங்களில் தொட்டிய படி நேர்த்தி கடன்களை செலுத்தினர்.இதில் சுற்றியுள்ள திம்மாவரம்,தென்பாதி, வடபாதி, வில்லியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ தேவி அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 40ம் ஆண்டு மயானக்கொள்ளை திருவிழாவும், மறைமலைநகர் அடுத்த கலிவந்தபட்டு, பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலிலும் மாயன கொள்ளை விமரிசையாக நடைபெற்றது.கருங்குழியில் மயான கொள்ளை விமரிசைமதுராந்தகம், பிப். 28 -மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில், மாசி மாதம் அமாவாசையொட்டி, மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.கடந்த 23-ல் பந்த கால் நடப்பட்டது.பின், நேற்று, ஸ்ரீ அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிம்ம வாகனத்தின் மீது எழுந்தருளி, முக்கிய வீதிகள் வழியாக, வீதி உள்ள வந்தது.பின், பம்பை, உடுக்கை, பாவாடைராயன், காளிப்படை உள்ளிட்ட பரிவாரங்களுடன் அங்காளம்மன் மயானம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது.பின், காப்பு அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி, செடல் இழுத்தனர்.பெண்கள் தீச்சட்டி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.பின், கருங்குழி முக்கிய சாலை சந்திப்பில், ஏராளமான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டனர்.பின், மதுராந்தகம் கிளியாற்று பகுதியில் மயான கொள்ளை சூறையிடல் விமரிசையாக நடைபெற்றது.இதில், பொதுமக்கள் நேர்த்திக்கடனாய் செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனை பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.இன்று, காலை மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு கும்பம் படையிலும், தெய்வீக நாடகமும் நடைபெறும்.செங்கையில் மயான கொள்ளை விழா விமரிசைசெங்கல்பட்டு, பிப். 28-செங்கல்பட்டு மாவட்டத்தில், அங்காளபரமேஸ்வரி கோவில்களில், மயான கொள்ளை விழா, நேற்று, நடைபெற்றது.செங்கல்பட்டு, ஆத்துார் ஆகிய பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில்களில், மயான கொள்ளை விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திகடன் செலுத்த, பக்தர்கள் உடலில் வேல் குத்தியும், உடலில் எலுமிச்சை பழம், அலகு குத்தியும் தேர் இழுத்தல், லாரி, கார், வேன், ஆட்டோ ஆகியவற்றை இழுத்துச்சென்று, நேர்த்திக்கடனை செலுத்தினர். பெண்கள் அலகு குத்தியும், அக்கினி சட்டி ஏந்தியும், காளிவேடம் அணிந்து ஆடிவந்தனர். ஏராளமான குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை, குறத்தி வேடம் தரித்து மயானம்வரை சென்று நேர்த்திகடன் செலுத்தினர். ரதத்தில், ஊர்வலமாக அங்காள பரமேஸ்வரி மயானத்துக்கு சென்றார். அங்கு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, பர்வத ராஜகுல மரபினர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை