திருக்கழுக்குன்றம்,திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பவுர்ணமி நாளில் கிரிவலம்செல்கின்றனர்.மாமல்லபுரம், கல்பாக்கம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள், பிற கனரக வாகனங்கள் ஆகியவற்றை, போலீசார், கிரிவல நாளில் புறவழிப்பாதை வழியே திருப்பி அனுப்புகின்றனர். இதனால், பேருந்து பயணியர், மாமல்லபுரம், கொத்திமங்கலம், சதுரங்கப்பட்டினம் சாலைகளில், எஸ்தல் ஹோட்டல் பகுதியிலும், செங்கல்பட்டு சாலையில், ஆசிரியர் நகர் புறவழிப்பாதை சந்திப்பிலும், இறக்கி, ஏற்றப்படுகின்றனர்.அப்பகுதிகளிலிருந்து, பயணியர், 1.5 கி.மீ., - 2.5 கி.மீ., தொலைவில் உள்ள நகரின் மைய பகுதிக்கு, ஷேர் ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.நெருக்கடியை பயன்படுத்தி, குறைவான தொலைவிற்கு தலா 30 ரூபாய் என, அடாவடி கட்டணம் வசூலிப்பதாக பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.கிரிவல நாளில், ஷேர் ஆட்டோக்களை கண்காணித்து, அடாவடிகட்டண வசூலை தடுத்து நிறுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என, பக்தர்கள்வலியுறுத்துகின்றனர்.