உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிஜ் வெடித்து தீ விபத்து

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரிஜ் வெடித்து தீ விபத்து

சூணாம்பேடு : சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட இல்லீடு பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.நேற்று காலை 6:00 மணிக்கு, சுகாதார நிலையத்தின் மகப்பேறு பிரிவில் இருந்த 'பிரிஜ்', திடீரென வெடித்து சிதறியது.இதில், ப்ரிட்ஜில் வைக்கப்பட்டு இருந்த மாத்திரை, மருந்துகள் மற்றும் அருகே இருந்த மருத்துவ உபகரணங்கள் தீப்பற்றி எரிந்தன.பணியில் இருந்த சுகாதார நிலைய ஊழியர்கள், சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது, அறை முழுதும் புகை மூட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின், செய்யூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்து குறித்து, சூணாம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ